Annamalai Supports Vijay
விஜய்க்கு சப்போர்ட் பண்ண அண்ணாமலை..!
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன்
என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அத்தனை கோடி முதலீடு, இத்தனை கோடி முதலீடு என்று கூறுவதாகவும், ஆனால் இது உண்மையில் வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த முதலீடு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கானதா அல்லது தனிப்பட்ட குடும்ப முதலீடா என மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லுமாறு முதலமைச்சரை கேட்டார். இதற்கு, திமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர், இப்பொது முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விஜய் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை, ” முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் பேசிய கருத்துக்களை வரவேற்கிறேன். விஜய் பேசியதை மறுத்தால், ஆளும் திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் யாராவது குரல் கொடுக்க நினைத்தால் பாஜக B டீம் என்கிறார்கள். நடிகர் ரஜினியை அடிக்கடி சந்திப்பேன், அவருடனான சந்திப்பில் அரசியல் இருக்காது” என்றார்.
