Annamalai explains | அண்ணாமலை விளக்கம்
விஜய் தரப்போடு கூட்டணி பேச்சுவார்த்தையே நடக்கவில்லை
என அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநில அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, ‘விஜய் அவர்களுடனான கூட்டணியை பொறுத்தவரைக்கும் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக சொல்லிவிட்டார். யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி அண்ணன் சொன்னதுடன் முடிந்து விட்டதாகவே நாங்கள் பார்க்கிறோம். தவெக ஆன்லைன் மீட்டிங் நடத்தியது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கூட்டணியின் தலைவராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் வேட்பாளர் அவர்தான். அவருடையே கருத்தே இறுதியாக நாங்கள் பார்க்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 51 தொகுதிகள் என்பதெல்லாம் உண்மை இல்லை. இந்த கூட்டணியை வழிநடத்தும் இபிஎஸ் அண்ணன் கருத்து தான் இறுதி. அதிக இடங்களில் அதிமுக நிற்க போகிறது. அப்படி இருக்கும்போது அவருடைய முடிவு தான், அனைவரின் முடிவாக நான் பார்க்கிறேன் என கூறினார்.
