U19 worldcup won | சாம்பியன் பட்டம்
சாம்பியன் பட்டம் வென்ற யூ19 இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ. 7.50 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
இளம் வீரர்களின் இந்த அசாத்திய திறமையைப் பாராட்டி பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எதிர்கால இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவர்களின் கடின உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் ரூ. 7.50 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
Total Page Visits: 109 - Today Page Visits: 2
