உண்மையின் உறைவிடம்…

union budget 2026 | மத்திய பட்ஜெட் தாக்கல்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், ரூ.75,000 நிலையான கழிப்பைக் கணக்கில் கொண்டால், ரூ.12.75 லட்சம் வரை மொத்த வருமானம் பெறுவோருக்கு வருமான வரி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“12 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பதவியேற்றதில் இருந்து ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம், நீடித்த வளர்ச்சி, மிதமான பணவீக்கம் ஆகியவற்றைக் கொண்டதாக நாட்டின் பொருளாதாரப் பாதை வகைப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமற்ற மற்றும் இடையூறான காலங்களில்கூட நாங்கள் எடுத்த விவேகமான முடிவுகளின் விளைவால் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் உள்ளது” என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

Total Page Visits: 108 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!