உண்மையின் உறைவிடம்…

mk stalin speech | முதல்வரின் பேச்சு

டபுள் இஞ்சின் என்று சொல்லி வட மாநில மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற உங்கள் டப்பா இஞ்சின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
2021-ல் பெற்ற தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்காமல் மறுபடியும் கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து பாஜக வருகிறது. கொள்கையால் இணைந்துள்ள திமுக கூட்டணியை தோல்வி கும்பல் வீழ்த்தப் போகிறதாம். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்று பிரதமரால் எப்படி சிரிக்காமல் சொல்ல முடிகிறது?.
தேர்தல் சீசன் வந்து விட்டால் போதும்; இனி அடிக்கடி பிரதமர் மோடியை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கலாம் இந்தமுறை வந்தபோது, வழக்கம்போல பழைய வடையைத்தான் சுட்டுட்டு போயிருக்கிறார்; அந்த மாவும் புளிச்சு போச்சு, அதைக் கேட்டு கேட்டு தமிழ்நாட்டு மக்களின் காதும் புளிச்சு போச்சு” என்று தெரிவித்தார்.

Total Page Visits: 117 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!