Palamedu jallikattu | பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் முதலிடம் பிடித்த நிலையில், குலுக்கல் முறையில் அஜித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
போட்டியின் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் மற்றும் பொதும்பு பிரபாகரன் ஆகிய இருவர் 16 களைகளை அடக்கி முதலிடம் பிடித்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் முதல் பரிசு பெறும் வீரரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர் அஜித்துக்கு முதல் பரிசான கார் வழங்கப்பட்டது. மற்றொரு வீரர் பிரபாகரனுக்கு 2-வது பரிசான இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் மாடுகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளி, தங்க நாணயங்கள், டி.வி., சைக்கிள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Total Page Visits: 111 - Today Page Visits: 2
