Tiruvallur christmas celeb | கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக ஆலயங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார் என்பதை குறிக்கும் வகையில் டிசம்பர் 25 உலகம் முழுவதும் வனவிலங்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்டார் கட்டப்பட்டு அதிகாலை ஆலயத்திற்கு சென்று குடும்பமாக புத்தாண்டு வழிபாடு செய்தல் அதனைத் தொடர்ந்து குடும்பங்கள் ஒன்று கூடி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கேக் வெட்டி கொண்டாடுதல் ஆகியவை நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்கள் அற்புத ஜெபகோபுரம் Ag ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம், கௌடி ஆலயம், டி இ எல் சி ஆலயம், அப்போஸ்தல கிறிஸ்தவ சபை, பெண்டிகோஸ் ஆலயம் ஆகிய தேவாலயங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றது பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆலயம் முழுவதும் காட்சியளிக்கிறது அற்புத ஜெபகோபுரம் AG ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் போதகர் j. செல்லதுரை அவர்கள் பேசுகையில் கிறிஸ்து நமக்காக பிறந்தார் நம்முடைய பாவங்களை மன்னிக்க பிறந்தார் அதனால் ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள் என்றும் ஒருவருக்கொருவர் அன்பு கூறுங்கள் என்றும் இயேசு கிறிஸ்து நமது உள்ளத்தில் பிறந்திருக்கிறார் என்பதை அனைவரும் உணர்ந்து அன்புடன் அனைவருடன் மகிழ்ச்சியுடன் இருப்போம் என்றும் தெரிவித்தார். அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார் இதேபோன்று அனைத்து ஆலயங்களிலும் பிரம்மாண்டமான வழிபாடு நடைபெற்றது.
