ethiopias honary award | எத்தியோப்பியாவின் விருது
எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நாட்டின் மிக உயரிய விருதான – எத்தியோப்பியாவின் தி கிரேட் ஹானர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான நாகரிகத்தால் கவுரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
இது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். உங்கள் அனைவருடனும், இந்த மாபெரும் எத்தியோப்பியா நாட்டில் இருப்பது எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம். நான் எத்தியோப்பியாவுக்கு வந்தவுடன், இங்குள்ள மக்கள் எனக்கு அன்பையும், பாசத்தையும் வழங்கினர். பிரதமர் என்னை விமான நிலையத்தில் வரவேற்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Total Page Visits: 155 - Today Page Visits: 2
