உண்மையின் உறைவிடம்…

Messi event collapse | மெஸ்ஸி ரசிகர்கள் ஆத்திரம்

கொல்கத்தாவில் மெஸ்ஸியை காண முடியாத ரசிகர்கள், ஏமாற்றத்தால் ரகளையில் ஈடுபட்டனர்.

அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் கொல்கத்தாவில் அவரது சிலையை அவரே திறந்து வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து சால்ட் லேக் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் மெஸ்ஸி தோன்றுவார் என கூறப்பட்டு, அதற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து இருந்தது.

சுமார் 4500 முதல் 12500 வரை விலை கொடுத்து அந்த டிக்கெட்களை வாங்கிய ரசிகர்கள் மெஸ்ஸியை பார்க்க ஆவலுடன் இருந்தனர். ஆனால், மைதானத்தில் அவரை சரியாக பார்க்க முடியாத நிலை இருந்தது. இதை அடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்து பாட்டில் உள்ளிட்டவற்றை வீசினர்.

மெஸ்ஸி உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். பாதுகாப்பு குறைபாடு மற்றும் மோசமான ஏற்பாடுகள் காரணமாக மெஸ்ஸி 10 நிமிடங்களில் வெளியேறிய நிலையில், ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தங்கள் கோபத்தை மைதானத்தின் மீது காட்டினர். மெஸ்ஸி வெளியேறிய செய்தி உறுதியானதும், கேலரியில் இருந்த ரசிகர்கள் கட்டுப்பாட்டை இழந்தனர். தடுப்புகளைத் தாண்டி மைதானத்திற்குள் ஓடினர். கேலரியில் இருந்த நூற்றுக்கணக்கான நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த நிகழ்வு விளையாட்டு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

Total Page Visits: 143 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!