Sivagangai bus incident | சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகானந்தா பாலிடெக்னீக் கல்லூரி அருகே காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் எட்டுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு வந்தன.
காயமடைந்தவர்கள் காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Total Page Visits: 72 - Today Page Visits: 2
