Aadhav arjuna condemns | திமுக தான் காரணம்
திமுக மிரட்டல் கொடுத்ததால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பியவர். ஆனால் திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது ஆனால் அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார்.
ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் அந்த மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கரூர் சம்பவத்துக்குப் பின்னரும் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என விஜய் பயணிக்கிறார் என தெரிவித்தார்.
