TVK Vijay Announces | விஜய் முக்கிய அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அக்கட்சயின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரக் குழு விவரம்:-
- N.ஆனந்த்
- ஆதவ் அர்ஜுனா B.A
- К.A. செங்கோட்டையன்
- A.பார்த்திபன்
- B.ராஜ்குமார் DME
- K.V.விஜய் தாமு
- S.P.செல்வம் DCE
- K.பிச்சைரத்தினம் கரிகாலன்
- M.செரவு மைதின் (எ) நியாஸ்
10.J. கேத்ரின் பாண்டியன் Μ.Α., B.Ed.
மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
Total Page Visits: 109 - Today Page Visits: 2
