உண்மையின் உறைவிடம்…

Tiruvallur school building | திருவள்ளூர் பள்ளி கட்டிடம்

திருவள்ளூரில் புதிதாக திறக்கப்பட உள்ள பள்ளி கட்டிடத்தை, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் ஆய்வு செய்தார்

.

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு

நகராட்சியிடம் ஒப்படைத்கப்பட்ட 51 சென்ட் அரசு நிலத்தில் ரூ.7.50 கோடியில் பள்ளி கட்டிடம் கட்டு மானப் பணிகளை வி.ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். முக்கியப் பகுதியில் உள்ள இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போதிய இட வசதி இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனால், கூடுதல் வகுப்பறை அல்லது மாற்று இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம், நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில்
மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை மீட்கக்கோரி திருவள்ளூர் எம் எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன். மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து கடந்த 2024 ஜனவரி மாதம் 4ம்தேதி மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை கையகப்படுத்தினர்.

இத்திலையில், நகராட்சி பள்ளிக் கட்டிடம் கட்ட ஏதுவாக ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 51 சென்ட் அரசு நிலத்தை நகராட்சிக்கு தானமாக வழங்க வலியுறுத்தி, நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர், அதன்பேரில் மீட்கப்பட்ட 51 சென்ட் அரசு நிலத்தை வருவாய்த்துறைநிர்வாகம் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட 51 சென்ட் அரசு நிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய பள்ளி கட் டிடம் கட்டுவதற்காக பூமி கட்டிடம் கட்ட முதல் கட்டமாக தனது திருவள்ளூர் ரூ.7.50 கோடி மதிப்பில் திருவள்ளூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளி கட்டுவதற் பூஜை நடத்தது புதிய பள்ளி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணியை எம் எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

இங்கு கட்டப்படும் புதிய கட்டிடம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியாக செயல்பட இருப்பதால் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 3 அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், கிட்டத்தட்ட 10000 மாணவர்கள் வரை படிக்க இருப்பதால், அவர்களுக்கு தேவையான வகுப்பறை. லேப் குடிநீர் வசதி, கழிவறை உள்பட அனைத்து வசதிகளுடன் அமைக்கப் பட்டு வருகிறது

இந்நிலையில், பள்ளியின் கட்டுமான பணிகளை.எம் எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண்டார். அப்போது. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்க ஒப்பந்த தாரருக்கு உத்தரவிட்டார். மேலும், நகராட்சியின் முக் கிய சாலையில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி விரைவில் தொடங்க இருப்பதால் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எம்எல்ஏ வி ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார். ஆய்வின் போது நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன். முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன், பி.எஸ்.எம்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் பார்த்திபன், நகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

Total Page Visits: 64 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!