elon musk son name | எலான் மஸ்க்கின் மகன்
எனது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் மகனுக்கு சேகர் என பெயர் சூட்டியுள்ளதான் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய எலான் மஸ்க், எனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருக்கும் எனக்கும் பிறந்த மகன்களில் ஒருவருக்கு, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரின் நினைவாக சேகர் என்ற பெயரை சூட்டியுள்ளோம். எனது மனைவி ஷிவான், கைக்குழந்தையாக இருக்கும்போதே அவரை அவரது பெற்றோர்கள் தத்துக்கொடுத்துவிட்டனர்.
அவரது தந்தை பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டு மாணவர் என்று நினைக்கிறேன். எனக்கு அதுபற்றி முழு விவரங்கள் தெரியாது. ஆனால் ஷிவான் குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டவர். அவர் கனடாவில் வளர்ந்தார்” என்று தெரிவித்துள்ளார். .
Total Page Visits: 105 - Today Page Visits: 2
