உண்மையின் உறைவிடம்…

Rajbhavan name changed | ராஜ்பவன் பெயர் மாற்றம்

ராஜ் பவன் என இருந்த பெயர் லோக் பவன் (மக்கள் பவன்) என மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள் ‘ராஜ் பவன்’ என அழைக்கப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை ‘ராஜ் நிவாஸ்’ என அழைக்கப்படுகிறது.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாகவே கூறி வந்தார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த கவர்னர்கள் மாநாட்டின் போது இதனை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கோரிக்கையாக வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன்கள் இனி ‘லோக் பவன்’ என்றும், ராஜ் நிவாஸ்கள் ‘லோக் நிவாஸ்’ என்றும் ஒரே மாதிரியாக பெயர் மாற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் தமிழில் மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Total Page Visits: 70 - Today Page Visits: 3

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!