உண்மையின் உறைவிடம்…

PM Modi Greets | பிரதமரின் புகழாரம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் என் மனதில் நிற்கும் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அவரின் தேசப்பக்தி மிகப்பெரியது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.
சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ந் தேதி அவரது பிறந்தநாள் விழா. இன்றும் கூட தமிழகத்துக்கு செல்லும்போது மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன். அம்மா ஜெயலலிதாவைப் பற்றி குறிப்பிடுவது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வருகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

Total Page Visits: 108 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!