உண்மையின் உறைவிடம்…

MK Stalin latest speech | என் வெற்றிக்கு பின்னால்

என் வெற்றிக்கு பின்னாலும் என் மனைவிதான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 18) சென்னை, கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருள்களை வழங்கி, உரையாற்றினார்

அப்போது பேசிய அவர், ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் தான் இருக்கிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என்னுடைய மனைவிதான் – நான் மட்டுமல்ல, சேகர்பாபுவாக இருந்தாலும் சரி, நேருவாக இருந்தாலும் சரி, இங்கு இருக்கக்கூடிய நீங்களாக இருந்தாலும் சரி.ஓராண்டு காலம் நான் மிசாவில் இருந்தபோது, என்னுடைய மனைவி கோபித்துக்கொண்டு ஏதாவது முடிவு எடுத்திருந்தால் என்னுடைய நிலைமை என்னவாகியிருக்கும் நினைத்துப் பாருங்கள் – தாங்கிக் கொண்டு, பொறுமையாக இருந்து, எவ்வளவோ கொடுமைகள் எனக்கு வந்த நேரத்தில், என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திய காரணத்தினால்தான் இன்றைக்கு நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். அதுபோலதான் ஒவ்வொருவரும். அதனால்தான் மணமக்களிடத்தில் நான் பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புவது, மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும், அந்த நிலையில் நீங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Total Page Visits: 169 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!