Pazhani Mahalaya amavasai
மஹாளய அமாவாசை – புனித நீராடும் நதியின் அவல நிலை
மஹாளய அமாவாசையை முன்னிட்டு பழனியில் தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் ஆற்றங்கரை சுகாதாரமற்று இருந்ததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்
அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்வது வழக்கம். அதிலும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவதை மக்கள் ஐதீகமாக கொண்டுள்ளனர். அதிலும் புராட்டசி அமாவாசை என்றால் கூடுதல் சிறப்பு உண்டு.
அந்த வகையில் இன்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பழனி சண்முக நதி ஆற்றங்கரையில் புனித நீராடி இறந்த முன்னோர்களுக்குத் தேங்காய், வாழைப்பழம், கருப்பு எள், புஷ்பம், கீரை வகைகள், பச்சரிசி, பழங்கள், காய்கறிகள் ஆகியவை படைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.ஆனால் பழனி சண்முகநதி ஆற்றங்கரையில் சுகாதாரமற்ற நிலையில் குப்பைகளும் கழிவுகளும் நீரில் கிடக்கின்றன. பொதுமக்கள் மன உளைச்சலுடன் தர்ப்பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே பழனி தேவஸ்தானம் அல்லது நகராட்சி அல்லது PWD நிர்வாகம் சேர்ந்து இந்த அவல நிலையை சரி செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
