Thailand tiger death | புலிகள் உயிரிழப்பு
தாய்லாந்தின் ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த 2 வாரங்களில் 72 புலிகள் ‘கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்’ தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக வேகமாக பரவும் இந்த வைரஸ் பாதிப்பால் அந்நாட்டின் சுற்றுலா துறை முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து, தொற்று மேலும் பரவாமல் தடுக்க பூங்கா நிர்வாகம் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதேவேளை முன்னர் 2004 ஆம் ஆண்டு சோன்புரி மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில் பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் 150 புலிகள் உயிரிழந்தன. அப்போது புலிகளுக்கு வழங்கப்பட்ட பச்சை கோழி இறைச்சி மூலம் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
தற்போதும் அதே போன்ற ஒரு சந்தேகம் அதிகாரிகளிடையே எழுந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக புலிகளை அடைத்து வைத்திருக்கும் இவ்வாறான பூங்காக்களின் மோசமான வாழ்விடச் சூழலே இத்தகைய பேரழிவுகளுக்குக் காரணம் என விலங்கு நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
