உண்மையின் உறைவிடம்…

ADMK OPS Byte | ஓபிஎஸ் அறிவிப்பு

எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு மாதமும் அடிப்படை தொண்டர்கள் உரிமைகள் மீட்கும் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவேன். அதில் எந்த நிலையிலும் நான் தனிக் கட்சி தொடங்கமாட்டேன் என்று அறிவித்திருந்தேன். அ.தி.மு.க-வின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவே தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை தொடங்கினேன்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினார்கள். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 1991-ல் ஒன்றிணைத்தவர் ஜெயலலிதா. தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு ஸ்கூட்டி என 62 வகையான உதவிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தவர். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என்று கூறி வந்தேன்.

கட்சிக்கு சோதனை வந்தபோது முதல்வர் பதவியை என்னிடம் கொடுத்தார் ஜெயலலிதா. 2- வது முறை அவரின் கட்டளையை ஏற்று நான் முதல்வரானேன். ஜெயலலிதா எனக்கு பல்வேறு சூழ்நிலைகளில் நற்சான்று கொடுத்தார். ஜெயலலிதா மறைந்தபிறகு என்னை காட்டாயப்படுத்தி முதல்வராக்கினார்கள்.

அவர் மறைந்தபிறகு எனக்கு முதல்வராவதில் விருப்பம் இல்லை என்று கூறினேன். எனினும் கட்டாயத்தின் பேரில் 3-வது முறையாக நான் முதல்வரானேன். நான் கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை. அரசியல் பிரபலம் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டேன்” என்றார்.

Total Page Visits: 95 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!