உண்மையின் உறைவிடம்…

Today gold rate | புதிய உச்சத்தில் தங்கம்

தங்கம் விலை இன்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.

அதன்படி கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மாலையில் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், நகைபிரியர்களுக்கு பேரிடியாக தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,370க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,600 உயர்ந்த நிலையில் மாலை ரூ.960 உயர்ந்துள்ளது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.216க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து கிலோ ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Total Page Visits: 131 - Today Page Visits: 2

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!