உண்மையின் உறைவிடம்…

டுடே டிரெண்டிங்248 Videos

tirupati sorgavasal ticket | சொர்க்க வாசல் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் ‘சொர்க்கவாசல்’ எனப்படும் ‘பரமபத வாசல்’ திறக்கப்பட்டு அந்த வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசனம் (வைகுண்ட துவார தரிசனம்) செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் […]

Tiruvallur bus stand | பிரம்மாண்ட விழா

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பேருந்து நிலையத்தில் வசந்தம் கூட்டமைப்பு சார்பாக பிரம்மாண்டமாய் விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. ஸ்டீபன் IRCDS இயக்குனர் திரு. பழனி .பூண்டி பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். உடற்கல்வி ஆசிரியர். முன்னாள் பூண்டி பஞ்சாயத்து தலைவர். காவல்துறை அதிகாரிகள். சட்டப் பணிகள் ஆனைக் குழுவில் இருந்து வழக்கறிஞர்கள். பூண்டி ஒன்றிய நிர்வாகிகள். மாவட்ட நிர்வாகிகள். திருவள்ளூர் ஒன்றிய நிர்வாகிகள். கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகிகள். கலந்து கொண்டனர் இந்த […]

Tiruvallur christmas celeb | கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக ஆலயங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார் என்பதை குறிக்கும் வகையில் டிசம்பர் 25 உலகம் முழுவதும் வனவிலங்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்டார் கட்டப்பட்டு அதிகாலை ஆலயத்திற்கு சென்று குடும்பமாக புத்தாண்டு வழிபாடு செய்தல் அதனைத் தொடர்ந்து குடும்பங்கள் ஒன்று கூடி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கேக் வெட்டி கொண்டாடுதல் ஆகியவை நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்கள் அற்புத ஜெபகோபுரம் […]

Tiruvallur heavy rain | திருவள்ளூர் கனமழை

திருவள்ளூர் மாவட்டத்தில் மழையினால் பாதிப்படைந்த பயிர்களின் சேதம் குறித்து கணக்கிடும் பணியை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் நேரில் சென்று ஆய்வு செய்தனர் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் அளவிற்கு மா மரம் தென்னை,வாழை மல்லி, தர்பூசணி , காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களாக மழை பெய்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் அளவிற்கு வேளாண்மை […]

Tiruvallur road protest | காலவரையற்ற வேலை நிறுத்தம்

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ளவர் லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எம். ஆர்.பி., செவிலியர்கள் […]

Tiruvallur school building | திருவள்ளூர் பள்ளி கட்டிடம்

திருவள்ளூரில் புதிதாக திறக்கப்பட உள்ள பள்ளி கட்டிடத்தை, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் ஆய்வு செய்தார் . திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைத்கப்பட்ட 51 சென்ட் அரசு நிலத்தில் ரூ.7.50 கோடியில் பள்ளி கட்டிடம் கட்டு மானப் பணிகளை வி.ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 200க்கும் […]

Tiruvallur welfare scheme | நலத்திட்ட உதவிகள் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்க விழா திருவேற்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப்,எம் பி சசிகாந்த் செந்தில் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 333.26 கோடி மதிப்பீட்டில் 377 முடிவிட்ட திட்ட பணிகளையும் ரூபாய் 137.38 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளையும் […]

Tiruvannamalai maha deepam | நாளை திருக்கார்த்திகை மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது. நாளை அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. பொதுவாக கார்த்திகை தீபம் பவுர்ணமியை ஒட்டியே வரும். அதனால், லட்சக்கணக்கான பக்தர்கள், மகாதீபத்தை தரிசித்தவாறே கிரிவலம் செல்வர். இந்த நிலையில், கார்த்திகை […]

TN Alcohol misuse | அஞ்சும் தமிழக காவல்துறை

பொதுவாக திமுக ஆட்சி காலங்களில் காவல் துறையில் செயல்பாடு சற்று மந்தமாகவும், அதிமுக ஆட்சி காலங்களில் காவல்துறையின் செயல்பாடு அதிரடியாகவும் இருக்கும் என்பது ஒரு மரபாகவே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் காவல் துறையின் செயல்பாடு அதிரடியாகவே இருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மந்தமாக தொடங்கிய காவல் துறையின் செயல்பாடு தற்போது முழுவதும் மந்த நிலையில் உள்ளது. காவல்துறை அதனுடைய காக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது என முதல்வர் […]

TN Assembly Election | 2026 சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தங்களுடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.ஆளுங்கட்சியான திமுக, கரூரில் முப்பெரும் விழா மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்பாகவே தனது சுற்று பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது பிரச்சார பயணங்களை துவக்கியுள்ளனர். கடந்த ஆண்டு புதியதாக கட்சி தொடங்கிய நடிகர் […]

TN Budget 2026 | தமிழக இடைக்கால பட்ஜெட்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை விதி எண் 26/1-ன் கீழ் தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி காலை 9:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்றைய தினம் 2026- 27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் சுற்றுச்சூழல் […]

TN Governor Changed | ஆளுநர் திடீர் மாற்றம்

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேக்கருக்கு தமிழக மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க ஆளுநராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருந்தவர் சி.வி.ஆனந்த போஸ். முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆனந்தபோஸுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற ஆளுநர் ஆனந்தபோஸ், […]

TN Voter List | பட்டியல் வந்தாச்சு..!

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இத்தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் 2025ல் தொடங்கியது.இதற்காக, கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்றது.இதன் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் இறுதி […]

TN Weather Report | வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் 15ம் தேதி வாக்கில் […]

TN Weather Report | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

TN Weather update | வானிலை மையம் தகவல்

சென்னையில் பெய்து வரும் பரவலான மழை மற்றும் கடுங்குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததுஇந்நிலையில், சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட […]

Today gold rate | இன்றைய தங்கம் விலை

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,850க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் […]

Today gold rate | தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்து ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருவது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று காலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை தற்போது கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.345-க்கும், […]

Today gold rate | புதிய உச்சத்தில் தங்கம்

தங்கம் விலை இன்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், நகைபிரியர்களுக்கு பேரிடியாக தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,370க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று […]

Today rain update | தமிழகத்தில் இன்று மழை

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.தமிழகம், புதுவை மற்றும் […]

Today rain update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 25-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகள், 26, 27-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் டிச.24 வரை வறண்ட […]

Today School leave | பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் […]

Today weather report | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதன்படி அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய […]

Today weather report | வெப்பநிலை உயரும்

தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், […]

Today weather update | வானிலை நிலவரம் இன்று

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் […]

Today weather update | வானிலை மையம்

டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, […]

Today Weather update | வானிலை மையம் அறிவிப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை (பிப்.4) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் […]

today weather update | வானிலை மையம் தகவல்

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.டிச.25ம் தேதி வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.டிச.26 மற்றும் 27ம் […]

Today Weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மார்ச் 1-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கிழக்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு […]

today weather update | வானிலை மையம் தகவல்

மார்ச் 4-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புஎன வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய […]

Today Weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.குமரிக்கடல் பகுதிகளிலிருந்து லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இன்று முதல் நாளை மறுநாள் வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் வரும் மார்ச் 14ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுளள அறிக்கையில், “மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 08-03-2026. கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தென் தமிழகத்தில் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மார்ச்.11ம் தேதி தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச்.12ம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.மார்ச்.13ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். அதேபோல் நாளை முதல் 15 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]

Today weather update | வானிலை மையம் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் நாளை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் […]

Trichy karthigai deepam | மலைக்கோட்டையில் தீபம்

திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை, இது உச்சிப்பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோயில் ஒன்று உள்ளது. இந்த உச்சி பிள்ளையார் கோயிலில் 100 கால் மண்டபம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும் மலைக்கோட்டையின் மீது […]

Trichy prison dead | திருச்சி மத்திய சிறை

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார். இவருக்கு வயது 19. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. தகவலறிந்து உடனடியாக சென்ற சிறை காவலர்கள் சுபினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]

trump epstein statue | டைட்டானிக் பாணியில்

அமெரிக்க தலைநகரான வாஷிங்கடன் டிசியில் உள்ள நேஷனல் மால் என்ற வணிக வளாகத்தில் எப்ஸ்டீன் உடன் டிரம்ப் இருக்கும் சிலை திறக்கப்பட்டுள்ளது. டைட்டானிக் படத்தில் ஆருயிர் காதலர்களாக ஜாக் மற்றும் ரோஸ் கப்பலின் முகப்பில் கைநீட்டி நிற்கும் காட்சி உலகப் பிரசித்தம். அதேபோல எப்ஸ்டீன் – டிரம்ப் நிற்பதுபோல இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சீக்ரெட் ஹேண்ட்ஷேக் என்ற கலை அமைப்பு இந்த சிலையை நிறுவியுள்ளது. டிரம்ப்புக்கு எதிரான போராட்ட வடிவமாக இந்த சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது.முன்னதாக நேஷனல் […]

TTV Dhinakaran Speech | நாங்க எல்லாம் ஒண்ணு

பங்காளி சண்டை முடிந்துவிட்டது , நாங்கள் அம்மாவின் தொண்டர்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுக்குள் இருந்த குடும்ப பிரச்சனை, கட்சி பிரச்சனை, அதனை மறந்து ஒன்றிணைந்துள்ளோம். நானும் எடப்பாடி பழனிசாமியும் முன்பு எப்படி இருந்தோமோ அதோபோல் ஒன்றிணைந்துவிட்டோம். எப்போதும்போல் அண்ணன், தம்பி போல் நானும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவோம். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.

TTV Dinakaran’s Plan | தேசிய ஜனநயாக கூட்டணிக்கு ஆதரவா? இல்லையா?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளரான டிடிவி தினகரன் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார். தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அவர் அதே கூட்டணியில் இருக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்காக பணியாற்றுவோம் என பாஜகவிடம் உறுதி கொடுத்து பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அதிமுகவில் இருந்து 5 ஆவது […]

TVK 3rd anniversary | தவெகவின் கொண்டாட்டம்

தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில், வரும் 2ஆம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா நாளில் கழகத் தோழர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும். மக்களுடன் மக்களாக இணைந்து மக்களுக்காக உழைப்போம். வெற்றித் தலைவர் அவர்களுக்கு வாகை மாலையை அணிவிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

TVK Ajitha Agnel | அஜிதாவின் விபரீத முடிவு

தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெண்கள் அணி நிர்வாகி அஜிதா ஆக்னல், கட்சி பொறுப்பு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். கட்சி தொடங்கிய காலம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக உழைத்து வந்த அஜிதா, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கக்கோரி பனையூர் தலைமை அலுவலகத்தில் விஜயின் காரை மறித்து போராட்டம் நடத்தியிருந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று தெரிகிறது. தற்போது […]

TVK Meeting salem | தவெக சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் சார்பாக சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் தாளமுத்து நடராஜன் மைதானத்தில் நாளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய்யும் கலந்துக்கொள்ள உள்ளதால், இதற்காக ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் தவெக கூட்டம் நடக்கவுள்ள இடத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், சேலத்தை பொறுத்தவரைக்கும் இந்த மாவட்டம் பிரிப்பதற்கு முன்பாக மாங்கனி மாவட்டம் என […]

TVK Protest announced | தவெக அதிரடி

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம். அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் […]

TVK Statment Release | தவெகவின் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப். 6 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி […]

TVK Vijay Announces | விஜய் முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அக்கட்சயின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-கழகத் தோழர்களுக்கு வணக்கம்.தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.தேர்தல் பிரசாரக் குழு விவரம்:-

TVK Vijay authority | தவெக கூட்டத்தில் தீர்மானங்கள்

விஜய்யின் தவெக கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், இன்று (11ஆம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.இந்தக் கூட்டத்தில், அண்மையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் மற்றும் நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு அவரின் தலைமை விரும்பி வருவோரை […]

TVK Vijay pollfray| ஆதவ் அர்ஜூனா தகவல்

வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என நினைக்கிறேன் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஆதர்வ் அர்ஜுனா பேசுகையில், தவெக தலைவர் விஜயின் எண்ண ஓட்டம் பற்றி எனக்குத் தெரியும். அவர், வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்புள்ளது. ஏனென்றால், 50, 60 வருடங்களாக வடசென்னையை ஒதுக்கி திமுக செய்த சூழ்ச்சியை முறியடிக்கக் கூடிய ஒரே ஒருவர் தவெக தலைவர் விஜய் தான் எனவும் […]

TVK Vijay Sangeetha | விஜய் சங்கீதா விவாகரத்து

விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று வழக்கறிஞர் மூலமாக விஜய் கூறியதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில், விஜய் உடனான விவாகரத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க விஜய் தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். நான் பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருகிறேன். சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை.. விவாகரத்து கோரியுள்ளதால், தற்போது சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். எனக்கு வீட்டிற்குள் […]

TVK Vijay Speech | இது ஒரு போர்

அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும், கூட்டணியில் சேர்த்துகொள்கிறார் ஸ்டாலின் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. சட்டம்-ஒழுங்கு காணாமல் போய் ரொம்ப நாளாகிவிட்டது. நாமும் கேள்வியாக கேட்கிறோம். ஆனால், பதில் வருவதே இல்லை. நிறைய மலைகிராமங்களில் பஸ் வசதியும் மருத்துவமனை வசதியும் இல்லை. தமிழ்நாட்டுல பெண்கள் பாதுகாப்பு கொட்டி கிடக்குதாம். கேட்குறவன்லாம் என்ன கேசரி சாப்பிட்டுட்டு இருக்கானா? பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு […]

TVK Vijay speech | எம்.ஜி.ஆர் சொன்னா மாதிரி

திமுக ஒரு தீய சக்தி, தவெக தூய சக்தி என ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தில் தவெக விஜய் தெரிவித்துள்ளார். ஈரோடு பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய், நான்கூட யோசிப்பேன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒரே வார்த்தைச் சொல்லி திமுகவை காலி செய்தார்கள். அப்போது ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறார்கள் என்று யோசித்தேன்.இப்போதான் புரிகிறது. அவர்கள் கூறியதை நான் மீண்டும் கூறுகிறேன். திமுக ஒரு தீய சக்தி, திமுக ஒரு தீய சக்தி…. தவெக ஒரு தூய […]

TVK Vijay speech | கடப நாடக திமுக அரசு

மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது என விஜய் தெரிவித்துள்ளார்.. இது குறித்து பதிவிட்டுள்ள அவர், என் நெஞ்சில் குடியிருக்கும்.. புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம்.எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி […]

TVK Vijay Speech | விஜய்யின் அதிரடி பேச்சு

பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள் என விஜய் உரையாற்றியுள்ளார். விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி கேட்டும் வந்துள்ளேன். நான் என்ன தப்பு செய்தேன். என்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன். அது தவறா? மற்ற கட்சிகள் மாநாடு நடத்த இடம் கொடுக்கிறார்கள். ஆனால், நமக்கு தரமாட்டேன் என்கிறார்கள் இது ஸ்டாலின் சாரி ஆப்பரேட்டிங் புரொசிஜர் என குற்றம்சாட்டினார். விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி […]

TVK Vijay statement | தவெக விஜய் ஆவேசம்

திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி என விஜய் ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. […]

TVK Vijay statement | தவெக விஜய்யின் பதிவு

எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்.சூழ்ச்சிகளால் நம்மை வீழ்த்த நினைத்தவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளால் சொல்லொணா வேதனைக்குப் பிறகு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு என மூன்று மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நாம் கண்டோம்.அதிலும் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கோ இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் விதிக்கப்படாத எண்ணிலடங்கா நிபந்தனைகள். அதிகார முகமூடியின் எண்ணங்களே நிர்பந்தங்களாகவும் நெருக்கடிகளாகவும் நம்முன் வைக்கப்பட்டன. அத்தனையையும் அநாயாசமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக நம் மக்களைச் […]

TVK Vijay statement | தவெக விஜய்யின் பதிவு

எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்.சூழ்ச்சிகளால் நம்மை வீழ்த்த நினைத்தவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளால் சொல்லொணா வேதனைக்குப் பிறகு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு என மூன்று மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நாம் கண்டோம்.அதிலும் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கோ இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் விதிக்கப்படாத எண்ணிலடங்கா நிபந்தனைகள். அதிகார முகமூடியின் எண்ணங்களே நிர்பந்தங்களாகவும் நெருக்கடிகளாகவும் நம்முன் வைக்கப்பட்டன. அத்தனையையும் அநாயாசமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக நம் மக்களைச் […]

TVK Whistle symbol | விசில் போடு ஆர்மி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. தவெகவின் இந்த சின்ன ஒதுக்கீடு கட்சியின் தேர்தல் பயணத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. விசில் சின்னம் தமிழகத்தில் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட சின்னம் என்பதால், வாக்காளர்களிடம் எளிதில் அடையாளம் காணப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தவெக தலைவர் விஜய் தலைமையில் ஜனவரி 25-ஆம் தேதி […]

U19 worldcup won | சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம் வென்ற யூ19 இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ. 7.50 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இளம் வீரர்களின் இந்த அசாத்திய திறமையைப் பாராட்டி பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எதிர்கால இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவர்களின் கடின உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் ரூ. 7.50 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

union budget 2026 | மத்திய பட்ஜெட் தாக்கல்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், ரூ.75,000 நிலையான கழிப்பைக் கணக்கில் கொண்டால், ரூ.12.75 […]
error: Content is protected !!