உண்மையின் உறைவிடம்…

டுடே டிரெண்டிங்248 Videos

Same date birthday | கடலூரில் ஒரு அதிசயம்

கணவன் – மனைவி இருவரும் ஒரே பிறந்த நாளை கொண்டிருந்த நிலையில் பிறந்த குழந்தையும் அதே நாளில் பிறந்து அசத்தியத்துடன் தந்தை பிறந்த அதே கிழமை மற்றும் நட்சத்திரம் ரத்த வகை என அனைத்திலும் ஒற்றுமையாகஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் துரைசாமி நகர் பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் – சுபாஶ்ரீ தம்பதிகள் இருவரும் 22 ம் தேதியை பிறந்த நாளாக கொண்டவர்கள். இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தையும் தற்பொழுது டிசம்பர் 22ஆம் தேதியே பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். […]

sikkim today earthquake | அடுத்தடுத்து நிலநடுக்கம்

சிக்கிமில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சிக்கிமில் கியால்ஷிங் மற்றும் மங்கன் பகுதிகளில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில், சிக்கிமின் கியால்ஷிங் பகுதியில் இன்று காலை 11.34 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிக்கிமின் மங்கன் பகுதியில் மதியம் 12.17 மணியளவில் ரிக்டர் 3.5 […]

Gold rate today | தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனையாகிறது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ. 14,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்த நிலையில் மாலையில் மாற்றமின்றி ரூ.280க்கு […]

Ma subramanian speech | சீனியாரிட்டி தான்

காலிப் பணியிடங்கள் உருவாகும்போது சீனியாரிட்டி அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், செவிலியர் பணியில் காலியிடங்கள் இருந்தால் மட்டுமே வழங்க முடியும். போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை ஆனால் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஒப்பந்த செவிலியர்களுக்கு பணியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசு யாரையும் கைவிடாது. 8 ஆயிரத்து மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

thiruparankundram-sikandar-dargah | வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா, பெரியவீதி பள்ளிவாசல் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மதுரை மாநகர் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சிக்கந்தர் தர்கா மற்றும் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு […]

Brain Eating Amoeba | மூளையை தின்னும் அமீபா

நேக்லிரிய பௌலிரி எனும் அமீபா (ஒரு செல் உயிரினத்தின் வகை) வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவையாகும். உலகெங்கிலும் உள்ள ஏரி, ஆறு, பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும் ஒரு உயிரியை அமீபா என அழைக்கிறோம். இதுபோன்ற இடங்களில் மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாகச் சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கிறது. அமீபா மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இந்த தொற்று ஏற்பட்ட நபருக்குக் காய்ச்சல் […]

Sasikala New party | சசிகலா கட்சியின் சின்னம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, தமிழக அரசியல் களத்தில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.சசிகலா தலைமையிலான கட்சியின் பெயர் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ (அஇபுதமமுக) என்பதாகும்.வரும் சட்டசபை தேர்தலில் இந்தக் கட்சி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

Today gold rate | தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்து ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருவது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று காலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை தற்போது கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.345-க்கும், […]

old woman issue | நால்வர் வெறிச்செயல்

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் நால்வரும் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை […]

Embassy of india | உடனடியாக வெளியேறுங்கள்

ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றமான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அதாவது, ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை காலக்கெடு விதித்துள்ளார். இந்த காலக்கெடுவிற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற […]

Cuddalore farmer protest | கரும்பு விவசாயிகள்

கடலூர் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகள் ஒன்றான பொங்கல் பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி பண்ருட்டி, பத்திரக்கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் கரும்பு விவசாயிகள் பன்னீர் கரும்புகளை விளைவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழக முதல்வர் பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் இடைத்தரகர்கள் இன்றி கரும்பை கொள்முதல் செய்ய சென்ற அதிகாரிகள் அரசு அறிவித்த தொகை 38 ரூபாயை […]

Erode vijay campaign | ஈரோட்டில் பேசும் விஜய்

ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த பரப்புரையில் கலந்துகொள்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தவெக தலைமை வெளியிட்டுள்ளது. மக்கள் சந்திப்பு நடைபெறும் இடங்களில் காவல் துறையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு BOX-களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Tiruvallur road protest | காலவரையற்ற வேலை நிறுத்தம்

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ளவர் லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எம். ஆர்.பி., செவிலியர்கள் […]

Annamalai Supports Vijay

விஜய்க்கு சப்போர்ட் பண்ண அண்ணாமலை..! முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன்என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அத்தனை கோடி முதலீடு, இத்தனை கோடி முதலீடு என்று கூறுவதாகவும், ஆனால் இது உண்மையில் வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த முதலீடு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கானதா அல்லது தனிப்பட்ட குடும்ப முதலீடா என மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லுமாறு முதலமைச்சரை கேட்டார். இதற்கு, திமுக அமைச்சர்கள் கடுமையாக […]

TVK 3rd anniversary | தவெகவின் கொண்டாட்டம்

தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில், வரும் 2ஆம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா நாளில் கழகத் தோழர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும். மக்களுடன் மக்களாக இணைந்து மக்களுக்காக உழைப்போம். வெற்றித் தலைவர் அவர்களுக்கு வாகை மாலையை அணிவிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Donald Trump announces | நாங்க உதவ தயார்

ஈரானில் போராட்டம்-வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 2600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே தலைநகர் தெக்ரானில் போராட்டங்களில் காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. முதலுதவி செய்வதற்குக்கூட நேரம் இல்லை என்ற மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். ரஷ்டில் உள்ள பூர்சினா மருத்துவமனைக்கு ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹேதி ஆசாத் […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். அதேபோல் நாளை முதல் 15 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]

TN Weather Report | வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் 15ம் தேதி வாக்கில் […]

Bahubali rocket carrying | பாகுபலி ராக்கெட்

அமெரிக்காவின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), தனது வலிமையான LVM3-M6 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோளான புளூபேர்ட் பிளாக்-2 (BlueBird Block-2) விண்கலத்தை இன்று (புதன்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, புதன்கிழமை காலை 8:55 மணி அளவில் ராக்கெட் ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 15 நிமிடங்களில், […]

Chennai food festival | சென்னை உணவு திருவிழா

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழா தொடங்கப்பட்டது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த பாரம்பரிய சுவைமிக்க உணவுகளான ஆம்பூர் மற்றும் திண்டுக்கல் பிரியாணி, கொங்கு மட்டன் பிரியாணி, விருதுநகர் புரோட்டா, கடலூர் மீன் புட்டு, கருவாடு சூப், அரியலூர் தோசை, மயிலாடுதுறை இறால் வடை, சேலம் தட்டு வடை, காஞ்சிபுரம் கோயில் இட்லி, நீலகிரி ராகி களி, தூத்துக்குடியின் […]

Sivagangai bus incident | சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகானந்தா பாலிடெக்னீக் கல்லூரி அருகே காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் எட்டுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு […]

90 lakhs fraud | ரூ.90 இலட்சம் மோசடி

சைதாப்பேட்டையிலுள்ள தனியார் வங்கியில் தங்க நகைகளை வேறொருவர் பெயரில் அடமானம் வைத்து ரூ.90 இலட்சம் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் வங்கி மேலாளர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, சைதாப்பேட்டை, VGP சாலையில் வசித்து வரும் சுலைமான், என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுலைமான், கிண்டி, லாயர் ஜெகநாதன் தெருவிலுள்ள Catholian Syrian Bank (CSB) வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துக் கொண்டு, அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் செலுத்தியும், பணம் […]

Shimla snow rain | கடும் பனிப்பொழிவு

இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் இன்று அடர்த்தியான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மலைச் சிகரங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் பனிப் போர்வையைப் போர்த்தியது போன்ற கண்கவர் காட்சியால், அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வரும் நாட்களில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mexico train accident | ரயில் தடம் புரண்டது

மெக்சிகோ நாட்டின் ஒக்சாகா மற்றும் வெராகுரூஸ் மாகாணங்களுக்கு இடையே இண்டர்ஓஷெனிக் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பசிபிக் பெருங்கடலுடன் மெக்சிகோ வளைகுடாவை இணைக்கிறது. இந்த ரெயிலை கடந்த 2023-ம் ஆண்டு மெக்சிகோ முன்னாள் ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் திறந்து வைத்தார்.இந்த இண்டர்ஓஷெனிக் ரெயில் நிசாண்டா நகரத்தின் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் […]

Thailand tiger death | புலிகள் உயிரிழப்பு

தாய்லாந்தின் ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த 2 வாரங்களில் 72 புலிகள் ‘கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்’ தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக வேகமாக பரவும் இந்த வைரஸ் பாதிப்பால் அந்நாட்டின் சுற்றுலா துறை முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து, தொற்று மேலும் பரவாமல் தடுக்க பூங்கா நிர்வாகம் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேளை முன்னர் 2004 ஆம் ஆண்டு சோன்புரி மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில் பறவைக் […]

DMK Youth conference | தயாராகும் திமுக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேளைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. தொடர்ந்து திமுக தனது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக தேர்தல் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை விருதுநகரில் திமுக தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடும் நடைபெறவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகுகின்றன. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக […]

Tamilnadu voter list | வாக்காளர் வரைவு பட்டியல்

எஸ்.ஐ.ஆருக்கு பின் தமிழ்நாட்டில் மொத்தமாக 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின்பு 5.43 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.61 லட்சம் பேர் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,191 வக்காளர்கள் இருக்கிறார்கள். ஆண் வாக்காளர்கள் 2,66,63,233 பேரும் பெண் வாக்காளர்கள் 2,77,06,332 பேரும் உள்ளனர். மொத்தமாக வரைவு வாக்காளர் […]

Aganda 2 release | திரையரங்குகளில் அகண்டா 2

நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டிசம்பர் 12ஆம் தேதி முதல் திரையரங்குகளில் அகண்டா படத்தை திரையிட 14 ரில்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. EROS international Media limited பட நிறுவத்துக்கும், 14 Reels Entertainment Private Limited என்ற நிறுவனத்துக்கும் இடையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதில், EROS நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 11 கோடியே 22 லட்சம் ரூபாயை […]

TN Assembly Election | 2026 சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தங்களுடைய செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.ஆளுங்கட்சியான திமுக, கரூரில் முப்பெரும் விழா மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்பாகவே தனது சுற்று பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது பிரச்சார பயணங்களை துவக்கியுள்ளனர். கடந்த ஆண்டு புதியதாக கட்சி தொடங்கிய நடிகர் […]

vijay in delhi | நேரில் ஆஜராகும் விஜய்

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட பலரிடம் டெல்லி சி.பி.ஐ. அலுவல கத்தில் விசாரணை நடந்தது.மேலும் சி.பி.ஐ. […]

vaithilingam joins dmk | தாய் கழகம் திமுக

திமுகவில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படுவது உகந்ததாக இல்லை. இன்று தமிழ்நாடு முதல்வரை தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து மக்கள் மனதில் உள்ளார் ஸ்டாலின்.அதனால் அண்ணா தொடங்கிய தாய்கழகத்தில் இணைந்துள்ளேன். அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரமாக செயல்படுகிறது. கூட்டணி தொடர்பான முடிவில் ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன்.அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு வந்தது […]

Tamilnadu election date | சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.அசாம் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்கேரளா சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் […]

PM Modi Greets | பிரதமரின் புகழாரம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் என் மனதில் நிற்கும் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அவரின் தேசப்பக்தி மிகப்பெரியது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ந் தேதி அவரது பிறந்தநாள் […]

Today gold rate | இன்றைய தங்கம் விலை

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,850க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் […]

Sengottaiyan speech | செங்கோட்டையன் உறுதி

தமிழக வெற்றிக் கழக மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதாக மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் தவெகவில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் தவெகவுக்கு வரவேற்பு இருக்கிறது. தவெக மற்றொரு அதிமுகவாக மாறும். இனிமேல் அதிமுக கிடையாது’’ என்றார்.

Redhills rain rescue | படகு மூலம் மீட்பு

செங்குன்றம் அருகே மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மக்களை தீயணைப்பு துறையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர். சென்னை செங்குன்றம் அடுத்த நியூ சன் கார்டன் இரண்டாவது பிரதான சாலை பாலவாயில் பகுதியில் வீட்டில் மழை நீர் புகுந்ததால் வெளியில் வர முடியாமல் அவதிக்குவுள்ளாகி இருந்தனர். இதனை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த பச்சையப்பன் […]

eps condemns mkstalin

என்ன சொல்லப்போறீங்க முதல்வரே – இபிஎஸ் அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு இடையே கூட இணக்கமான சூழலை அமைத்திட முடியாத அரசாக இன்றைய திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு விடுதியில் ஒரு […]

gold rate today | மீண்டும் உயர்வு

இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனையாகி வருகிறது.தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் தினமும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு 10 ஆயிரம் […]

Palamedu jallikattu | பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் முதலிடம் பிடித்த நிலையில், குலுக்கல் முறையில் அஜித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். போட்டியின் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் மற்றும் பொதும்பு பிரபாகரன் ஆகிய இருவர் 16 களைகளை அடக்கி முதலிடம் பிடித்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் முதல் பரிசு பெறும் வீரரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.இதன்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர் அஜித்துக்கு முதல் பரிசான கார் வழங்கப்பட்டது. மற்றொரு வீரர் பிரபாகரனுக்கு 2-வது பரிசான இருசக்கர வாகனம் […]

dhoni traffic violation | தோனிக்கு அபராதம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மார்ச் 1 ஆம் தேதி, கான்கே ரிங் சாலையில் பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் அருகே அவரது சொகுசு கார் அதிவேகத்தில் சென்றதை அங்குள்ள தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்ததையடுத்து, மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு […]

Youtuber Kerala case | யூடியூபருக்கு ஜாமின்

கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைதான யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கியது. கேரள பேருந்தில் தன்னை ஒருவர் தவறாக தொட்டதாக ஒரு பெண் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தற்கொலை செய்துகொண்ட நபரை வீடியோ எடுத்த ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 21 நாட்கள் […]

Today rain update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 25-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகள், 26, 27-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் டிச.24 வரை வறண்ட […]

Meera mithun case | சென்னை உயர் நீதிமன்றம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக கூறி அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மீறி மிதுனுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு போலீசார் வழக்குப் […]

Rajbhavan name changed | ராஜ்பவன் பெயர் மாற்றம்

ராஜ் பவன் என இருந்த பெயர் லோக் பவன் (மக்கள் பவன்) என மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள் ‘ராஜ் பவன்’ என அழைக்கப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை ‘ராஜ் நிவாஸ்’ என அழைக்கப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாகவே கூறி […]

Thakkaar book launch | உள்ளதை உள்ளபடி

ஒருங்கிணைந்த குடும்ப உறவுகளின் குரலாக ஒலிக்க தொடங்கிய தக்கார்…! சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தக்கார் குரல் மாத இதழ் வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தி நாளான கடந்த 2 ஆம் தேதி நேற்று முன்தினம் நடைபெற்றது. தக்கார் குரலின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான யூசுப் பாஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பா.ஜோதிமணி, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் துணை ஆட்சியர் டீ.முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ம.வீ.ராஜதுரை, சென்னை பத்திரிக்கையாளர் […]

TTV Dhinakaran Speech | நாங்க எல்லாம் ஒண்ணு

பங்காளி சண்டை முடிந்துவிட்டது , நாங்கள் அம்மாவின் தொண்டர்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுக்குள் இருந்த குடும்ப பிரச்சனை, கட்சி பிரச்சனை, அதனை மறந்து ஒன்றிணைந்துள்ளோம். நானும் எடப்பாடி பழனிசாமியும் முன்பு எப்படி இருந்தோமோ அதோபோல் ஒன்றிணைந்துவிட்டோம். எப்போதும்போல் அண்ணன், தம்பி போல் நானும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவோம். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.

PMK Ramadoss cries | கண்கலங்கிய ராமதாஸ்

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “இந்த பொதுக்குழு, செயற்குழு 27 தீர்மானங்களை நிறைவேற்றிருக்கிறோம். இந்த நேரத்தில் எதை பேசி எதை விடுவது என்று எனக்குள் ஒரு குழப்பம் இருக்கிறது. ஏனென்றால் எனக்கு இருக்கின்ற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு மணி நேரம் தேவை. நான் இடையில் இடையில் பேசியிருக்கலாம். ஆனால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கேட்டுக் கொண்டிருந்தேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை எப்போது நான் […]

OTT platform banned | மத்திய அரசு அதிரடி

மத்திய அரசின் விசாரணைக்குப் பிறகு பின்வரும் ஐந்து தளங்களும், அவற்றுடன் தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் செயலிகளும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன: தடைக்கான முக்கிய காரணங்கள்: அரசின் தொடர் நடவடிக்கை: கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு சிறிய அளவிலான ஓடிடி தளங்களைக் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

Speaker ombirla | ஓம் பிர்லா அதிர்ச்சி

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றாத நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் மோடியை தாக்க சதி நடந்ததாகவும், எனவேதான் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக விளக்கமளித்துள்ளார்.மக்களவையில் ராகுல் காந்தி, சீன விவகாரம், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை […]

BJP Annamalai Arrest | அண்ணாமலை திடீர் கைது

திருப்பூா், சின்னகாளிபாளையத்தில் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். திருப்பூர், சின்னகாளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் அங்கு குப்பையை தரம் பிரித்துக் கொட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து லாரிகளில் குப்பை ஏற்றப்பட்டு சின்னக்காளிபாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுசெல்லப்பட்டது. அங்கு கிராம மக்கள் திரண்டு லாரிகளைச் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் வாக்கு வாதம் […]

TVK Vijay speech | கடப நாடக திமுக அரசு

மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது என விஜய் தெரிவித்துள்ளார்.. இது குறித்து பதிவிட்டுள்ள அவர், என் நெஞ்சில் குடியிருக்கும்.. புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம்.எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி […]

Tamilnadu hindu religious | பாஜகவை மிஞ்சும் அறநிலையத்துறை

கடந்த 2014 முதல் இந்தியாவை ஆண்டு வரும் பாஜக, ஒரு மதவாத கட்சி என்றே பார்க்கப்படுகிறது. பாஜகவின் செயல்பாடு இந்துக்களுக்கு ஆதரவாகவும், மற்ற மதத்தினருக்கு எதிராக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் பாஜகவின் அரசியல் செயல்பாடு ஏற்று கொள்ளப்பட்டாலும் திராவிட கட்சிகள் ஆளும் தமிழகத்தில் பாஜகவின் இந்துத்துவா என்ற திட்டம் இதுவரை ஏற்று கொள்ளப்படவில்லை. இந்துக்களுக்காக மட்டுமே பாஜக செயல்பட்டு வருகிறது என்ற நிலை இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவை மிஞ்சும் அளவிற்கு தமிழ்நாடு இந்து […]

Karur stampede issue | தவெக விஜய் ஆஜர்

கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் மேற்கொண்ட விசாரணை நிறைவடைந்தது. இன்று விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக கரூர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வழங்கிய பதில்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தது. எனவே அதனை மையப்படுத்தி இன்று விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.விஜய்யிடம் […]

chile wild fires | பயங்கர காட்டுத்தீ

சிலி நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில், மக்களுடன் காடுகள், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்து உள்ளார்.சிலியின் மத்திய பையோபையோ பகுதி, பக்கத்தில் உள்ள நூபிள் பகுதி என பல இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் வன பகுதிகள் தீயில் எரிந்து போயுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் எரிந்துள்ளன. இதனை தொடர்ந்து, 50 […]

Iran war ship | ஐரிஸ் டெனா

இந்தியாவின் கடற்படை அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த ‘மிலன்-2026’ சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பலான ‘ஐரிஸ் டெனா’ வந்திருந்தது. பயிற்சி முடிந்து மார்ச் 4 அன்று இலங்கை அருகே இந்திய பெருங்கடலில்சென்றுகொண்டிருந்த ஐரிஸ் டெனாவை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.இந்தியாவின் விருந்தினராக சென்ற எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.இந்நிலையில் இந்த […]

TVK Vijay pollfray| ஆதவ் அர்ஜூனா தகவல்

வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என நினைக்கிறேன் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஆதர்வ் அர்ஜுனா பேசுகையில், தவெக தலைவர் விஜயின் எண்ண ஓட்டம் பற்றி எனக்குத் தெரியும். அவர், வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்புள்ளது. ஏனென்றால், 50, 60 வருடங்களாக வடசென்னையை ஒதுக்கி திமுக செய்த சூழ்ச்சியை முறியடிக்கக் கூடிய ஒரே ஒருவர் தவெக தலைவர் விஜய் தான் எனவும் […]

puducherry ration shop | இனி ரேஷன் கடைகளில்

புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கி வரப்படும் நிலையில் சத்துணவுக்காக ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார் புதுச்சேரியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிறுதானிய வகையை சேர்ந்த கேழ்வரகு மாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. கேழ்வரகு கால்சியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்த ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவாகும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது […]

Naam thamizhar katchi | நாதக பொதுக்கூட்டம்

நாதக பொதுக்கூட்டம் டிச.27ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tiruvallur school building | திருவள்ளூர் பள்ளி கட்டிடம்

திருவள்ளூரில் புதிதாக திறக்கப்பட உள்ள பள்ளி கட்டிடத்தை, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் ஆய்வு செய்தார் . திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைத்கப்பட்ட 51 சென்ட் அரசு நிலத்தில் ரூ.7.50 கோடியில் பள்ளி கட்டிடம் கட்டு மானப் பணிகளை வி.ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 200க்கும் […]

chitfund fraud arrest | சிட்பண்டு நிறுவனத்தில் மோசடி

அரும்பாக்கம் பகுதியில் சிட்பண்டு நிறுவனம் நடத்தி ரூ.2.4 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 2 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை, கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரும்பாக்கம் பகுதியில் உள்ள அச்சலிஸ் சிட்பண்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் ரூ.2.17 லட்சம் செலுத்தியுள்ளார். சீட்டு பணம் முதிர்வடைந்த பின்னரும் மேற்படி டில்லிபாபு உட்பட சுமார் 70 பொதுமக்களிடம் பணம் ரூ.2.4 கோடிக்கு […]
error: Content is protected !!