உண்மையின் உறைவிடம்…

டுடே டிரெண்டிங்248 Videos

Australia gun fire | ஆஸ்திரேலியாவில் பயங்கரம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நடைந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் அமைந்துள்ள போண்டி கடற்கரையில் அமைந்துள்ளது. இக்கடற்கரையில் யூத பண்டிகைகளில் ஒன்றான ஹனுக்காவை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த சூழலில் போண்டி கடற்கரையில் இன்று மாலை 5 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் […]

Trichy karthigai deepam | மலைக்கோட்டையில் தீபம்

திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை, இது உச்சிப்பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோயில் ஒன்று உள்ளது. இந்த உச்சி பிள்ளையார் கோயிலில் 100 கால் மண்டபம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும் மலைக்கோட்டையின் மீது […]

Pak officer waved TN | வேவு பார்த்த பாகிஸ்தான்

தமிழகத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கின் முக்கிய திருப்பமாக, தமிழக சிறப்பு நீதிமன்றம் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்னாள் துணை தூதர் அமீர் சுபைல் சித்திக் என்பவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் அக்டோபர் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாகிஸ்தான் உளவு செயல்பாடுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணை, நாடு முழுவதும் […]

admk accuses tvkvijay | விஜயை சாடிய அதிமுக

பல ஆண்டுகளாகத் தனது திரைப்படங்களின் டிக்கெட்டுகளைச் சட்டத்திற்குப் புறம்பாக ‘பிளாக்’கில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று குற்றம் சாட்டியுள்ளது. அதிமுக ஐடி விங் பவெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி. அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் […]

ditwa new cyclone | உருவானது புதிய புயல்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டிட்வா புயல் இன்று உருவாகி உள்ளது. இது குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறியதாவது:- சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, நோக்கி டிட்வா புயல் நகரும். வரும் 27, 28-ல் கடலோர தமிழகம், புதுவை, காரைக்காலில் அதிகபட்சமாக மணிக்கு 40-50 கி.மீ.வரை தரைக்காற்று […]

Anbil mahesh byte | ஸ்டாலினும் ராகுலும்

ஸ்டாலினும், ராகுலும் ஒரே போன் காலில் இந்த பிரச்சனையை முடித்துவிடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அன்பில் மகேஸ் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் நல்ல புரிதலான உறவில் இருக்கிறார்கள். இது ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் உள்ளது. யார் என்ன வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு கூட்டணியை இவ்வளவு தூரம் கொண்டு செல்வது […]

TN Weather Report | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

President murmu approves | அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விபி-ஜி ராம் ஜி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். லோக்சபா, ராஜ்யசபாவில் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்ட மசோதாவிற்கு(VB-G RAM-G) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.நாடாளுமன்றத்தின் இரு […]

padayappa re release | தெறிக்கவிட்ட படையப்பா

நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, ‘படையப்பா’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் கொண்டாடிய அல்லது கொண்டாட மறந்த படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அதில் சில படங்கள் ரீ-ரிலீஸிலும் ஆதிக்கத்தை செலுத்தின. குறிப்பாக புதிய படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ரீ-ரிலீஸ் படங்களில் கொண்டாட்டங்களும் அமைந்துள்ளன. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ‘படையப்பா’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர் முன்பதிவில் மட்டும் 85 […]

Red alert districts | வெளியே வர வேண்டாம்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இன்று (நவ.29) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி, ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்டும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல, நாளை (நவ.30) திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலர்டும்; சென்னை, காஞ்சிபுரம், […]

Ladakh Statehood protest | லடாக்கில் வெடித்த வன்முறை

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 4 பேர் பலியாகினர். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சியை வழங்கும் 6வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து […]

karur supreme court | உச்சநீதிமன்றம் வேதனை

பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுப்பது தொடர்பான வழக்கில், ‘மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி சூர்ய காந்த், ‘தங்களது அடிப்படை உரிமை எனக்கூறி டெல்லியில் போராட்டம் நடத்துவோரை, பள்ளி குழந்தைகள், நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறிப்பிட்ட இடத்தில் நடத்துமாறு நம்மால் நெறிப்படுத்த முடியும். ஆனால் சென்னையில் ஒரு பேரணி நடப்பதாக வைத்துக்கொள்வோம்; அங்குள்ள மைதானத்தில் 10,000 பேர் மட்டுமே கூட […]

Gas cylinder stopped | பாரத் பெட்ரோலியம் விளக்கம்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்துள்ள செய்திகளுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தில் தற்போது எந்த சிக்கலும் இல்லை என்றும், போதிய இருப்பு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சிலிண்டர் பதிவு செய்வதற்கான கால இடைவெளி மட்டும் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ADMK OPS Byte | ஓபிஎஸ் அறிவிப்பு

எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு மாதமும் அடிப்படை தொண்டர்கள் உரிமைகள் மீட்கும் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவேன். அதில் எந்த நிலையிலும் நான் தனிக் கட்சி தொடங்கமாட்டேன் என்று அறிவித்திருந்தேன். அ.தி.மு.க-வின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவே தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை தொடங்கினேன். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினார்கள். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 1991-ல் ஒன்றிணைத்தவர் ஜெயலலிதா. தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு […]

TVK Vijay statement | தவெக விஜய் ஆவேசம்

திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி என விஜய் ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. […]

Today weather update | வானிலை நிலவரம் இன்று

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் […]

Trichy prison dead | திருச்சி மத்திய சிறை

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார். இவருக்கு வயது 19. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. தகவலறிந்து உடனடியாக சென்ற சிறை காவலர்கள் சுபினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Anesthesia in Tamilnadu | மயக்க மருந்தில் அதிர்ச்சி

உலகம் முழுவதும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்போது நோயாளிகளுக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இந்த மயக்க மருந்தை எந்த சிகிச்சையின் போது எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். ஏனெனில் சிலருக்கு முழு மயக்கத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும், சிலருக்கு அரை மயக்கத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும், மயக்க மருந்து பயன்படுத்துவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் மயக்க மருந்து பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்தும் […]

iran launches drone | ஈரானின் ட்ரோன் தாக்குதல்

துபாய் விமான நிலையம் அருகே அதிகாலையில் நடந்த டிரோன் தாக்குதால் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. சவுதி, ஓமன், பஹ்ரைன், துபாய் என அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தாளங்களை குறிவைத்து, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை யு.ஏ.இ மீது ஈரான் 1,800க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; துபாய் […]

TVK Statment Release | தவெகவின் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப். 6 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி […]

TVK Vijay Announces | விஜய் முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அக்கட்சயின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-கழகத் தோழர்களுக்கு வணக்கம்.தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.தேர்தல் பிரசாரக் குழு விவரம்:-

Akash lockup death | பிரேத பரிசோதனையில்

அரசு மருத்துவமனை வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆகாஷின் உடலில் மொத்தம் 28 இடங்களில் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெறும் ‘கீழே விழுந்ததால்’ ஏற்பட்ட காயங்கள் அல்ல என்பதை மருத்துவக் குறிப்புகள் உணர்த்துகின்றன. அரசு மருத்துவமனை வழங்கிய பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆகாஷின் உடலில் மொத்தம் 28 இடங்களில் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெறும் ‘கீழே விழுந்ததால்’ ஏற்பட்ட காயங்கள் அல்ல என்பதை […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் வரும் மார்ச் 14ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுளள அறிக்கையில், “மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 08-03-2026. கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். […]

idiyappam vendors | உணவு பாதுகாப்புத் துறை

உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் இனி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை உணவு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இடியாப்பம் விற்கும்போது கையுறை, தலையுறை அவசியம். உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay public meeting | விஜய்யின் மக்கள் சந்திப்பு

ஈரோட்டில் வருகிற 18ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விஜய்க்கு மாவட்ட எஸ்.பி சுஜாதா அனுமதி அளித்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த ரூ.50 ஆயிரம் வாடகை என்றும், அதேபோல் ரூ.50 ஆயிரம் டெபாசிட் என்ற நிபந்தனையும் விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது. அதேநேரம், புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது […]

Tiruvannamalai maha deepam | நாளை திருக்கார்த்திகை மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது. நாளை அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. பொதுவாக கார்த்திகை தீபம் பவுர்ணமியை ஒட்டியே வரும். அதனால், லட்சக்கணக்கான பக்தர்கள், மகாதீபத்தை தரிசித்தவாறே கிரிவலம் செல்வர். இந்த நிலையில், கார்த்திகை […]

Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன்

Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன் சிறப்பு வாய்ந்த சூரசம்ஹாரம் கும்பாபிஷேகத்திற்கு பிறகு திருச்செந்தூரில் நடைபெறும் முதல் சூரசம்ஹாரம்“ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்” அறுபடை வீட்டின் நாயகனான முருக பெருமான் அருள்கிடைத்தால் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி என பல கோடி பக்தர்கள் தமிழ் கடவுளான முருக பெருமானை வழிபட்டு வருகின்றனர். தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு பல்வேறு இடங்களில் கோயில்களும், அந்த கோயில்களுக்கு என்று தனிக்கதை இருந்தாலும் முருக பெருமான் என்றாலே அனைவரின் […]

union budget 2026 | மத்திய பட்ஜெட் தாக்கல்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், ரூ.75,000 நிலையான கழிப்பைக் கணக்கில் கொண்டால், ரூ.12.75 […]

sengottaiyan joins TVK | செங்கோட்டையனுக்கு பதவி

செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; 2026 -ல் தவெக தலைவர் விஜயை மக்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு ‘தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியை அறிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்; தாம் சார்ந்திருந்த கழகத்தின் […]

iran-revolutionary-guards | இஸ்ரேலில் தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் டெல் அவிவ் அலுவலகத்தின் மீது “திடீர் ஏவுகணை” தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் இன்று அறிவித்துள்ளன. இதனால் நெதன்யாகுவின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நேற்று முன் தினம் திடீர் தாக்குதலை நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவர் அயாத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நேற்று முன் தினம் […]

manipur violence | மணிப்பூரில் வன்முறை

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் டாங்குள் கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். மணிப்பூரில் மீண்டும் வன்முறை காரணமாக உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக மணிப்பூரில் 2 நாட்களில் மட்டும் 30 வீடுகள் வரை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் […]

railway hikes fare | ரயில் டிக்கெட் உயர்வு

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் டிசம்பர் 26 முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. 215 கி.மீ தூரத்திற்கு மேல் பயணிப்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. 215 கி.மீ-க்கும் குறைவான தூரம் பயணிப்போருக்குக் கட்டண உயர்வு இல்லை. மின்சார ரயில்கள் (Suburban trains) மற்றும் புறநகர் ரயில் பயணங்களுக்குக் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புகள்: 215 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் சாதாரண வகுப்புகளில் கி.மீ-க்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ வரை: […]

Loksabha tamiliachi speech | தமிழச்சியின் வலியுறுத்தல்

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார். இது குறித்து பேசிய அவர், உலகில் முத்தழிழ் அறிஞர் கருணாநிதி போன்ற ஆளுமையை காண்பது அறிவு. மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். திராவிட மரபின் சாம்பியன் கருணாநிதி. சமூக நீதிக்கும், நல்லாட்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஒருமுறை மகாத்மா காந்தி குறித்து, ‘இவ்வுலகில் பல […]

Putin visit india | இந்தியா வரும் புதின்

ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் பயணமாக டிசம்பர் 4-ந்தேதி இந்தியா வர உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது, ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், இந்தியக் குடியரசுத் தலைவரும் புடினை வரவேற்று, விருந்து அளிக்கவுள்ளார். புடினின் இந்தப் பயணம், இந்தியா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையை அமைக்கவும், பரஸ்பர நலன் […]

Chennai Fake beggers | பீதியில் பொதுமக்கள்

தமிழகத்தில், குறிப்பாக தலைநகர் சென்னையில், யாசகம் கேட்பவர்கள் (பிச்சைக்காரர்கள்) — குடும்பத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், வறுமையின் பிடியில் சிக்கியவர்கள் உள்ளிட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு அரசு காப்பகங்களை கட்டி இருக்கிறது. யாசகர்கள் இல்லாத நகரமாக சென்னையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், குடும்பத்தால் கைவிடப்பட்டு தனியாக வாழும் முதியவர்கள் மற்றும் ஆதரவில்லாதவர்கள், யாசகம் கேட்டு தங்களது பசியை போக்கி வருகின்றனர்.ஆனால் தற்போது சென்னையில் யாசகம் கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

Jammu kashmir accident | ராணுவ வாகன விபத்து

ஜம்மு – காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் வியாழக்கிழமை பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டம், தனலாவில் உள்ள படேர்வா – சாம்பா சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 ராணுவ வீரர்கள் பயணித்த நிலையில், 10 வீரர்கள் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து படேர்வா மாவட்ட மருத்துவ அதிகாரி […]

Gas cylinder crisis | இந்தியன் ஆயில் அறிவிப்பு

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் எதிரொலியாக சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பல்வேறு நகரங்களில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது, சமையலுக்கு பயன்படும் எல்பிஜி என்னும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பிரித்தெடுக்கப்படுகிறது. தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கச்சா […]

Smirit Mandana | ஸ்மிருதி மந்தனா அசத்தல்

மகளிர் அணியின் பேட்டர் தரவரிசையை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டைப் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 790 ரேட்டிங் புள்ளிகளுடன் தற்போது உலகின் சிறந்த பேட்டராகத் திகழ்கிறார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவர் அரைசதம் விளாசி அசத்தியது, இந்த தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.கடந்த 2025-ம் ஆண்டு முழுவதும் சிறப்பான […]

Today Weather update | வானிலை மையம் அறிவிப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை (பிப்.4) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் […]

BJP Annamalai tweets | அடிப்படை வசதிகள் வேண்டும்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்று வரும் மிக முக்கியமான மருத்துவமனை. இங்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் அவலநிலையில் வைத்திருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, கடந்த மே […]

Srilanka ditwa cyclone | தமிழக அரசு நிவாரணம்

இலங்கையில் இதுவரை இல்லாத வகையில், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வந்ததால் கனமழையால், வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர்.கனமழையால் தொடர்ச்சியாக 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து விட்டன. 1.08 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 2.19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் […]

Gavaskar blasts pakistan

பாகிஸ்தான் மேல நடவடிக்கை எடுங்க – கோபப்பட்ட கவாஸ்..! மீடியா சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மேலும் இந்த ஆட்டம் துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இரு அணிகளின் கேப்டன்கள் அல்லது பயிற்சியாளர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டிக்கான […]

tibetan spritual leade | தலாய் லாமாவுக்கு விருது

2026-ம் ஆண்டுக்கான 68-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்று (பிப்ரவரி 1) அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றுள்ளார். தி ரிஃப்ளெக்ஷன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா’ என்ற அவருடைய ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது. திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.அவர் […]

pmmodi welcomes uae | ஆரத்தழுவி வரவேற்பு

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். புது டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அமீரக அதிபரை மரபுப்படி வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான இந்த சந்திப்பு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் பதட்டங்கள் அதிகரித்து […]

DMDK LK Sutheesh | தேமுதிக அறிவிப்பு

தேமுதிக சார்பில் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தேமுதிக சார்பில் வெளியான அறிவிப்பில், ‘2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக கழகத்தின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என்று தலைமை கழகத்தின் சார்பாக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரரான இவர், அக்கட்சியின் பொருளாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

OPS Joins DMK | கடம்பூர் ராஜூ கருத்து

எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆன்மா ஒரு காலமும் ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்காது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், அதற்காக நிச்சயம் அவருக்கு தண்டனை உண்டு. என்னுடைய அரசியல் லாபத்திற்காக திமுகவிற்கு செல்கிறேன் என்று சொன்னால் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் தான் ஓபிஎஸ். ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி நாட்டு மக்கள் இன்று […]

Tiruvallur christmas celeb | கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக ஆலயங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார் என்பதை குறிக்கும் வகையில் டிசம்பர் 25 உலகம் முழுவதும் வனவிலங்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்டார் கட்டப்பட்டு அதிகாலை ஆலயத்திற்கு சென்று குடும்பமாக புத்தாண்டு வழிபாடு செய்தல் அதனைத் தொடர்ந்து குடும்பங்கள் ஒன்று கூடி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கேக் வெட்டி கொண்டாடுதல் ஆகியவை நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்கள் அற்புத ஜெபகோபுரம் […]

MK Stalin announced | முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!

விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மகளிருக்கு கலைஞர் பெயரால் வழங்கப்படும் உரிமைத் தொகை 1,000 ரூபாயை நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் வழங்கி கொண்டிருக்கிறோம். இந்நிலையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு 1,000 ரூபாயை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வந்தது. […]

Chennai rain update | வெளுத்து வாங்கும் மழை

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

TN Alcohol misuse | அஞ்சும் தமிழக காவல்துறை

பொதுவாக திமுக ஆட்சி காலங்களில் காவல் துறையில் செயல்பாடு சற்று மந்தமாகவும், அதிமுக ஆட்சி காலங்களில் காவல்துறையின் செயல்பாடு அதிரடியாகவும் இருக்கும் என்பது ஒரு மரபாகவே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் காவல் துறையின் செயல்பாடு அதிரடியாகவே இருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மந்தமாக தொடங்கிய காவல் துறையின் செயல்பாடு தற்போது முழுவதும் மந்த நிலையில் உள்ளது. காவல்துறை அதனுடைய காக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது என முதல்வர் […]

mk stalin speech | முதல்வரின் பேச்சு

டபுள் இஞ்சின் என்று சொல்லி வட மாநில மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற உங்கள் டப்பா இஞ்சின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.2021-ல் பெற்ற தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்காமல் மறுபடியும் கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து […]

Indonesia Earthquake | இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவானது நிலநடுக்கத் தகவல் புல்லட்டின் படி, இந்த நிலநடுக்கம் 25 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது, அட்சரேகை 2.68°N மற்றும் தீர்க்கரேகை 96.07°E இல் ஆரம்ப ஆயத்தொலைவுகளுடன் உள்ளது. இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்ட தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம், இருப்பினும், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளது. எனினும், […]

Sengottaiyan speech | செங்கோட்டையன் விளக்கம்

விஜய் துண்டுச் சீட்டைப் பார்த்துப் பேசுவது குறித்து எழுந்த விமர்சனத்தை, அரசியல் நடைமுறையின் ஒரு சாதாரண அம்சமாக மாற்றிப் புரியவைத்திருக்கிறார் செங்கோட்டையன். இது தேர்தலை முன்னிட்டு உருவாகும் புதிய அரசியல் விவாதங்களில் ஒன்றாக மாறியுள்ளது.அவர் கூறுகையில், அரசியல் மேடைகளில் முக்கியமான தரவுகள், புள்ளிவிவரங்கள், திட்ட அறிவிப்புகள் போன்றவற்றை பேசும் போது குறிப்புகளைப் பார்த்து பேசுவது சாதாரணமான விஷயமே எனத் தெரிவித்தார். “பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரை பல முக்கிய தலைவர்கள் […]

PM Modi speaks | நெருங்கிய உறவு

இந்தியா, மலேசியாவுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான வரலாற்று உறவுகள் சமீப ஆண்டுகளில் உறுதியான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான எனது பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நமது விரிவான மூலோபாய பங்களிப்பை நாம் மேலும் வலுப்படுத்துவோம் என கூறினார். மேலும்இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, பொருளாதாரம் மற்றும் புத்தாக்கத்தில் பங்களிப்பை மேம்படுத்தவும், நமது ஒத்துழைப்பை […]

ICC T20 Worldcup | முக்கிய வீரர் இல்லை

10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன.இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் […]

SIR Forms Uploaded | படிவங்கள் பதிவேற்றம்

தமிழகத்தில் விநியோகிக்கப்பட்ட 100% SIR படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடந்த நிலையில், எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 6.41 கோடி (6,41,14,587) வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட 6,40,84,624 கணக்கீட்டுப் படிவங்களில் நேற்றுவரை 6,38,25,877 (99.55%) படிவங்கள் பதிவேற்றப்பட்டன. இந்த நிலையில், இந்தியத் தேர்தல் […]

Srilanka flood death | சுழற்றி அடிக்கும் வெள்ளம்

இலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளநீரில் வீடுகள் மூழ்கியதால் பலர் கூரைக்கு ஏரிச்சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலிகாப்டர்களில் சென்று மக்களைக் காப்பாற்ற முயல்கின்றன. 17 வட்டாரங்களிலிருந்து கிட்டத்தட்ட 6,000 பேர் அரசாங்க அவசரகாலக் கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கடலோரப் பகுதிகளில் வசிப்போரை உடனடியாக வெளியேறி பத்திரமான இடங்களுக்குச் செல்லுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பல இடங்களில் பாறைகள், மண், மரங்கள் ஆகியவை சரிந்து […]

Tamilnadu governor | பொறுப்பு ஆளுநர்

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பொறுப்பு ஆளுநராக அர்லேகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

TVK Whistle symbol | விசில் போடு ஆர்மி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. தவெகவின் இந்த சின்ன ஒதுக்கீடு கட்சியின் தேர்தல் பயணத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. விசில் சின்னம் தமிழகத்தில் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட சின்னம் என்பதால், வாக்காளர்களிடம் எளிதில் அடையாளம் காணப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தவெக தலைவர் விஜய் தலைமையில் ஜனவரி 25-ஆம் தேதி […]

Today weather update | வானிலை மையம் தகவல்

தென் தமிழகத்தில் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மார்ச்.11ம் தேதி தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச்.12ம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.மார்ச்.13ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் […]
error: Content is protected !!