உண்மையின் உறைவிடம்…

முக்கிய செய்திகள்20 Videos

Vijay Latest Speech |மோடி ஜி வந்தா பண்ணுவீங்களா? – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்டம் வாரியாக தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளார். கடந்த வாரம், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த நிலையில், இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பேசினார். நாகப்பட்டினம் அண்ணா சிலை அருகே விஜய் பேசினார். இதில் பேசிய விஜய் , எல்லாருக்கும் வணக்கம், இப்ப நான் எந்த மண்ணில் நிற்கிறேன் தொியுமா. நாகூர் ஆண்டவர்கள் அன்போட, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியுடன், கடல் தாய் மடியில் இருக்கும் […]

CM MK Stalin about students

ஒரு ஃப்ரண்டா இருங்க – முக ஸ்டாலின் மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, முடிவுற்ற பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்து, புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” […]

Karur Money Theft

கார நிப்பாட்டு..! பணத்த எடு – சட்டுன்னு சிக்கிய திருடர்கள் வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி – திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது,மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன்(37), தவமணி(27), சத்யராஜ்(27) புதுக்கோட்டையை சேர்ந்த […]

PM Modi Speaks essentials

பிரதமர் மோடி சொன்ன குட் நியூஸ்..! நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது . வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு […]

Westbengal Heavy rain

மேற்குவங்கத்தை புரட்டி போட்ட கனமழை..! ஸ்கூல் லீவு..! மேற்குவங்கத்தை புரட்டி போட்ட கனமழை..! ஸ்கூல் லீவு..!

Ladakh Statehood protest | லடாக்கில் வெடித்த வன்முறை

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 4 பேர் பலியாகினர். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சியை வழங்கும் 6வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து […]

PM modi speaks about GST | ஜிஎஸ்டி யில் அடுத்த மாற்றம்

ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்கள் மேலும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் […]

venezuela earth quake | சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 6.2ஆக பதிவாகியுள்ளது. 7.8 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அங்கிருந்த மக்கள் உடனே வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் […]

Thakkaar book launch | உள்ளதை உள்ளபடி

ஒருங்கிணைந்த குடும்ப உறவுகளின் குரலாக ஒலிக்க தொடங்கிய தக்கார்…! சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தக்கார் குரல் மாத இதழ் வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தி நாளான கடந்த 2 ஆம் தேதி நேற்று முன்தினம் நடைபெற்றது. தக்கார் குரலின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான யூசுப் பாஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பா.ஜோதிமணி, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் துணை ஆட்சியர் டீ.முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ம.வீ.ராஜதுரை, சென்னை பத்திரிக்கையாளர் […]

Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன்

Tiruchendur Temple Murugan | அசுரனை வதம் செய்யும் முருகன் சிறப்பு வாய்ந்த சூரசம்ஹாரம் கும்பாபிஷேகத்திற்கு பிறகு திருச்செந்தூரில் நடைபெறும் முதல் சூரசம்ஹாரம்“ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்” அறுபடை வீட்டின் நாயகனான முருக பெருமான் அருள்கிடைத்தால் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி என பல கோடி பக்தர்கள் தமிழ் கடவுளான முருக பெருமானை வழிபட்டு வருகின்றனர். தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு பல்வேறு இடங்களில் கோயில்களும், அந்த கோயில்களுக்கு என்று தனிக்கதை இருந்தாலும் முருக பெருமான் என்றாலே அனைவரின் […]

TTV Dinakaran’s Plan | தேசிய ஜனநயாக கூட்டணிக்கு ஆதரவா? இல்லையா?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளரான டிடிவி தினகரன் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார். தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அவர் அதே கூட்டணியில் இருக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்காக பணியாற்றுவோம் என பாஜகவிடம் உறுதி கொடுத்து பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அதிமுகவில் இருந்து 5 ஆவது […]

chess Championship 2026 | 2026 உலக செஸ் சாம்பியன்ஷிப்

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை இதுவரை திவ்யா தேஷ்முக மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் பெற்றிருந்த நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி மூன்றாவதாக தகுதி பெற்றுள்ளார்.உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற மகளிர் கிராண்ட் சுவிஸ் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்றதன் மூலம், மூன்றாவது இந்தியராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் பிரிவின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் 24 வயதான செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, சீனாவைச் […]

Tamilnadu fishermen welfare | இடித்து தள்ளப்பட்ட கூடாரம்

பனையூர் குப்பத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்த வலை பின்னும் கூடாரத்தை இடித்து தள்ளியதற்கு மீனவர் சங்கத்தின் சென்னை புறநகர் மாவட்டம் சார்பாக நன்றி தெரிவித்தனர்.. தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் திரு துரை மகேந்திரன் அவர்களின் ஆலோசனையின் படி அமைப்பு செயலாளர் பனையூர் பெ. மூர்த்தி அவர்களின் தலைமையில் சென்னை மாநகராட்சியின் 197 வது வட்ட உறுப்பினர் திருமிகு மேனகா சங்கர் அவர்களை சந்தித்து பனையூர் குப்பத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்த வலை […]

chennai Commissioner office | குறை தீர் முகாம்

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 20 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .அருண், காவல் ஆணையரகத்தில் புகார் மனு […]

Thiruma Greets abinesh | தங்கம் வென்ற அபினேஷ்

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகத்தில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபினேஷை சந்தித்து விசிக தலைவர் வாழ்த்து தெரிவித்தார். அவரை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத் தொகையாக 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார், அவரது பயிற்சியாளர் புவியரசிற்கு 10 ஆயிரம் ரூபாயை வழங்கி சிறப்பித்தார். மேன்மேலும் இந்தியாவிற்கு பெருமை […]

Sarathkumar greets karthika | கார்த்திகாவுக்கு பாராட்டு

ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் கபடி விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. உலக அரங்கில் நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்த அணியில் துணை கேப்டனாக இருந்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய […]

Tiruvallur bday celeb | பட்டாக்கத்தியில் கொண்டாட்டம்

திருவள்ளூர் அருகே பட்டாகத்தியில் கேக் வெட்டி கையேரி பட்டாசுகளை கொளுத்தி எரிந்து பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளுர் அடுத்தகொப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ஒளி என்ற இளைஞருக்கு கடந்த 1 ம் தேதி பிறந்தநாள் அன்றைய தினம் அவரது சக நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்ற அருண்குமார், கனிஷ்கர், மேலும் 17 வயதுடைய இரு நண்பர்கள் என 5 பேர் ஒன்றாக இணைந்து தமிழ் ஒளி பிறந்த […]

Madhavaram fake documents | பல கோடி சொத்து

சென்னை, மாதவரம் பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து இரண்டடுக்கு மாடி வீடு கட்டிய நபரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் வசித்து கொண்டு நகைப்பட்டறை நடத்தி வரும் திருமதி.பிரியங்கா, பெ/வ.30 என்பவருக்கு சொந்தமான மாதவரம் பொன்னியம்மன்மேடு, தணிகாச்சலம் நகரில் உள்ள பிளாட் எண்.138ல் உள்ள 2,134 சதுர அடி கொண்ட சுமார் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள சொத்தினை சந்திரன் மற்றும் சிலர் […]

puzhal lake alert | புழல் ஏரி நீர்வரத்து

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி 3வது முறையாக ஏரியில் இருந்து 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வேகமாக நிரம்பியது. இன்று காலை 6மணி நிலவரப்படி 3300 மில்லியன் கன […]

Addictive substance seized | பல கோடி ரூபாய் மதிப்பு

தொண்டி அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து தொண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் இலங்கைக்கு கடத்தி வருவதாக ராமநாதபுரம் சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற அவர்கள் தொண்டி அருகே பாசி பட்டினம் பகுதியில் பஸ்சை நிறுத்தி ஏறி சோதனை செய்துள்ளனர். அப்போது சுமார் 4 […]
error: Content is protected !!