71வது தேசிய திரைப்பட விருதுகள்..! 3 விருதை தட்டிய தமிழ்ப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 23) டெல்லி விக்யான் பவனில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு […]
உச்சம் தொட்ட தங்கம் விலை..! ஒரு சவரன் ரூ..? தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது. நேற்று மட்டும் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது நகை பிரியர்களை அதிர வைத்தது. நேற்று தங்கம் விலை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு […]
Youtubers-க்கு ஆப்பு அடிக்கணும் – வடிவேலு ஒரு 10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். அதை நடிகர் சங்கம் தடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69ஆவது பொதுக்குழு கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 21) நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசுகையில், ” நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக்கொண்டு நமது […]
தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனிடையே, இன்று […]
டிரம்மில் மனைவி உடல்…ஷாக் கொடுத்த கணவன் கும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடித்து கொலை செய்து டிரம்மில் அடைத்து மண்ணில் புதைப்பு. இரண்டு மாதங்களுக்கு முன் மனைவியை கொலை செய்து புதைத்ததாக கூறிய கணவன் கைது. சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய காவல்துறையினர் தீவிரம். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் 39. பெயிண்டிங் உள்ளிட்ட கூலி தொழில் செய்து வந்த சிலம்பரசனுக்கும் பிரியா என்பவருக்கும் […]