ttv dinakaran cant accept | திட்டவட்டமாக தெரிவித்த டிடிவி
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன், “அரசியலில் இருப்பதால் அரசியல் மட்டும்தான் பேச வேண்டும் என்று அவசியமில்லை. நண்பர்கள் என்ற முறையில் அண்ணாமலையுடன் ஒரு மணி நேரம் பேசினேன்.அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோதுதான் எங்களை கூட்டணிக்கு கொண்டு வந்தார். தில்லியில் நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை. அண்ணாமலை மூலமாகதான் கூட்டணியில் இணைந்தோம். கூட்டணி விட்டு விலகிய பிறகும் அவரிடம் பேசிக் […]



